ஜோதிடம்

ஒலிம்பிக் மகளிர் கோல்ப் தனிநபர் ஸ்ட்ரோக் பிரிவில் இந்திய வீராங்கனை அதிதி அஷோக் (23 வயது, பெங்களூரு) 4வது இடம் பிடித்து நூலிழையில் பதக்க வாய்ப்பை நழுவவிட்டார். மூன்றாவது சுற்றின் முடிவில் அதிதி 2வது இடத்தில் இருந்ததால், 4வது மற்றும் கடைசி சுற்றிலும் அவர் சிறப்பாக செயல்பட்டு பதக்கத்தை முத்தமிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில், நேற்று நடந்த பரபரப்பான கடைசி சுற்றில் பின்தங்கிய அதிதி 4வது இடம் பிடித்ததால் வெண்கலப் பதக்கம் கூட கிடைக்காதது இந்திய ரசிகர்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தியது. எனினும், இந்த போட்டியின் தொடக்கத்தில் பெரிய எதிர்பார்ப்பு ஏதும் இல்லாமல் களமிறங்கிய இளம் வீராங்கனையான அதிதி, கடைசி வரை பதக்க வாய்ப்பில் நீடித்து அனைவரின் பாராட்டுதல்களையும் அள்ளினார். இந்த போட்டியில் அமெரிக்காவின் கோர்டா நெல்லி தங்கப் பதக்கம், ஜப்பானின் இனாமி மோன் வெள்ளி, நியூசிலாந்தின் கோ லிடியா வெண்கலம் வென்றனர். மற்றொரு இந்திய வீராங்கனை தீக்‌ஷா தாகர் 50வது இடத்தை பிடித்தார்.



from Dinakaran.com |08 Aug 2021 https://ift.tt/3jxfURe
via IFTTT

Post a Comment

0 Comments