ஜோதிடம்

கொழும்பு: ஐசிசி உலக கோப்பை டி20 தொடருக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தில் அக்டோபர் 17ம் தேதி தொடங்கி நவம்பர் 14ம் தேதி வரை நடைபெற உள்ள இந்த தொடருக்கான இலங்கை அணியின் கேப்டனாக தசுன் ஷனகா நியமிக்கப்பட்டுள்ளார். மொத்தம் 15 வீரர்கள் அடங்கிய அணியில் இளம் சுழற்பந்துவீச்சாளர் மஹேஷ் தீக்‌ஷனா (21 வயது) இடம் பிடித்துள்ளார். கொரோனா விதிமீறல் காரணமாக ஓராண்டு தடை விதிக்கப்பட்டுள்ளதால் நிரோஷன் டிக்வெல்லா, குசால் மெண்டிஸ், தனுஷ்கா குணதிலகா தேர்வு செய்யப்படவில்லை. காயம் காரணமாக ஓய்வில் இருந்த விக்கெட் கீப்பர் குசால் பெரேரா, அணிக்கு திரும்பியுள்ளார். இலங்கை: தசுன் ஷனகா (கேப்டன்), தனஞ்ஜெயா டி சில்வா, குசால் பெரேரா, தினேஷ் சண்டிமால், அவிஷ்கா பெர்னாண்டோ, பானுகா ராஜபக்ச, சரித் அசலங்கா, வனிந்து ஹசரங்கா, கமிந்து மெண்டிஸ், சமிகா கருணரத்னே, நுவன் பிரதீப், துஷ்மந்த சமீரா, பிரவீன் ஜெயவிக்ரமா, லாகிரு மதுஷங்கா, மஹேஷ் தீக்‌ஷனா.



from Dinakaran.com |13 Sep 2021 https://ift.tt/3lbdzw0
via IFTTT

Post a Comment

0 Comments