பாரா ஒலிம்பிக் வில்வித்தை போட்டியில் இந்திய வீரர் ஹர்விந்தர் சிங் நேற்று வெண்கலப் பதக்கம் வென்றார். ஆக. 27ல் நடந்த ஆடவர் தனிநபர் (72 ஏரோ ஆர்ஆர்) தரவரிசை சுற்றுப் போட்டியில் ஹர்விந்தர் 21வது இடம் பிடித்தார். மற்றொரு இந்திய வீரர் விவேக் சிக்காரா 10வது இடம் பிடித்தார். தொடர்ந்து நேற்று நடந்த முதல் சுற்றில் வெற்றி பெற்ற விவேக் , 2வது சுற்றில் தோற்று வெளியேறினார். எனினும், ஹர்விந்தர் தனது முதல் சுற்றில் 6-5 என்ற புள்ளி கணக்கில் இத்தாலி வீரர் ஸ்டெபனோவையும், 2வது சுற்றில் 6-5 என்ற கணக்கில் ரஷ்ய வீரர் பாடோவையும் வென்றார்.மாலையில் நடந்த காலிறுதியில் 6-2 என ஜெர்மனி வீரர் மைக்கை வீழ்த்தினார். அரையிறுதியில் அமெரிக்க வீரர் கெவின் மாதரிடம் 4-6 என்ற கணக்கில் போராடி தோற்ற அவர், 3வது இடத்துக்கான மோதலில் நேற்றிரவு கொரிய வீரர் சூ மின் கிம்மை 6-5 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தி வெண்கலப் பதக்கத்தை கைப்பற்றினார்.நேற்று ஒரே நாளில் இந்தியாவுக்கு ஒரு வெள்ளி, 2 வெண்கலம் என 3 பதக்கங்கள் கிடைத்தன. பதக்க பட்டியலில் இந்தியா 2 தங்கம், 6 வெள்ளி, 5 வெண்கலம் என மொத்தம் 13 பதக்கங்களுடன் 37வது இடத்தில் உள்ளது. 1968ல் இருந்து 2016 வரை நடந்த பாரா ஒலிம்பிக் போட்டிகளில் 12 பதக்கங்களை வென்றிருந்த இந்தியா, நடப்பு தொடரில் அமர்க்களமாக பதக்க வேட்டை நடத்தி அசத்தி வருகிறது.
from Dinakaran.com |04 Sep 2021 https://ift.tt/3h3rIds
via IFTTT
0 Comments