ஜோதிடம்

ஐபிஎல் தொடரில் தற்போது 8 அணிகள் உள்ளன. இடையில் இது 10ஆக உயர்த்தப்பட்டது. ஆனால் 8 அணிகள்தான் நிரந்தரமாக தொடர்கின்றன. இந்நிலையில் ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் அணிகளின் எண்ணிக்கை 8 லிருந்து 10 ஆக உயர்த்தப்படும் என்று பிசிசிஐ சில மாதங்களுக்கு முன்பு அறிவித்தது. அதன்படி புதிதாக 2 அணிகளை தேர்வு செய்வதற்கான ஏலத்தை பிசிசிஐ அறிவித்துள்ளது. விரும்புவோர், கட்டணத் தொகையாக ₹10 லட்சத்துடன் அக். 5ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். அடுத்த சீசனில் புதிய அணிகள் பங்கேற்கும்.



from Dinakaran.com |02 Sep 2021 https://ift.tt/3zC1tCp
via IFTTT

Post a Comment

0 Comments