ஜோதிடம்

பாரா ஒலிம்பிக் ஆண்கள் பேட்மின்டன் ஒற்றையர் எஸ்எல்4 பிரிவு பைனலில் நேற்று களமிறங்கிய இந்திய வீரர் சுஹாஸ் யதிராஜ் (38 வயது) 2வது இடம் பிடித்து வெள்ளிப் பதக்கத்தை முத்தமிட்டார். இறுதிப் போட்டியில் பிரான்சின் லூகாஸ் மஸூர் (23 வயது) 15-21, 21-17, 21-15 என்ற செட் கணக்கில் யதிராஜை வீழ்த்தி தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றார். விறுவிறுப்பான இப்போட்டி 1 மணி, 2 நிமிடத்துக்கு நீடித்தது. சுஹாஸ் யதிராஜ், உத்தரப்பிரதேச மாநிலத்தின், கவுதம் புத்தா நகர் (நொய்டா) மாவட்ட கலெக்டர் என்பது குறிப்பிடத்தக்கது. ஐஏஎஸ் அதிகாரியான யதிராஜ், பாரா ஒலிம்பிக்கில் பதக்கம் வென்று தனது பன்முகத் திறமையை நிரூபித்துள்ளார்.



from Dinakaran.com |06 Sep 2021 https://ift.tt/2WPlUh7
via IFTTT

Post a Comment

0 Comments