டோக்கியோ: காயம் காரணமாக டேக்வாண்டோ வீராங்கனை அருணா மறுவாய்ப்பு போட்டியில் இருந்து விலகியதால் வெண்கலம் வெல்லும் வாய்ப்பு கை நழுவியது. டோக்கியோவில் நடைபெறும் பாரா ஒலிம்பிக் போட்டியின் டேக்வாண்டா(கே 44) 49கிலோ எடை பிரிவில் இந்திய வீராங்கனை அருணா சிங் தன்வர் களமிறங்கினார். முதல் சுற்றில் அசத்தாலாக விளையாடி 29-9 என்ற புள்ளி கணக்கில் செர்பியா வீராங்கனை டேனிஜெலா ஜோவானோவிச்சை வீழ்த்தினார். தொடர்ந்து காலிறுதியில் பெரு வீராங்கனை லியோனர் எஸ்பினோசாவுடன் மோதினார். ஆரம்பத்தில் வேகம் காட்டிய அருணாவுக்கு காலில் காயம் ஏற்பட்டது. அதனால் புள்ளிகள் குவிக்க முடியாமல் தடுமாறினார். அதை பயன்படுத்திய பெரு வீராங்கனை 84-21 என்ற புள்ளி கணக்கில் வென்றார். லியோனர் இறுதிப்போட்டிக்கு முன்னேறியதால் அருணாவுக்கு வெண்கலம் வெல்லும் ‘மறுவாய்ப்பு’ ஆட்டத்தில் விளையாட வாய்ப்பு கிடைத்தது. ஆனால் காயத்தை பரிசோதனை செய்ததில் எலும்பில் அடிப்பட்டிருப்பது உறுதியானது. அதனால் அவர் போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். எனவே இந்தியாவுக்கான வெண்கல வாய்ப்பு பறிபோனது. * தொடரும் பதக்க வாய்ப்புகள் தொடர்ந்து 2வது நாளாக நேற்றும் இந்தியர்கள் யாரும் பதக்கம் வெல்லவில்லை. ஆனால் அடுத்த சுற்றுக்கு முன்னேறி பதக்க வாய்ப்பை தக்க வைத்துள்ளனர். பேட்மின்டனில் பிரமோத் பகத் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார். அதேபோல் கலப்பு இரட்டையர் பிரிவில் பிரமோத், பாலக் கோஹ்லி அடுத்த சுற்றில் இன்று விளையாடுகின்றனர். மேலும் பேட்மின்டனில் சுகாஸ் யதிராஜ், தருண் தில்லான், கிருஷ்ணா நாகர் ஆகியோரும் அடுத்த சற்றுக்குள் நுழைந்துள்ளனர்.
from Dinakaran.com |03 Sep 2021 https://ift.tt/3kSWfvX
via IFTTT
0 Comments