பெரு தலைநகர் லிமாவில் நடைபெறும் ஜூனியர் உலக துப்பாக்கிசுடுதல் சாம்பியன்ஷிப் தொடரின் மகளிர் ஸ்கீட் குழு பிரிவில் அரீபா கான், ரெய்சா தில்லான், கனேமத் செகோன் ஆகியோர் அடங்கிய இந்திய அணி தங்கப் பதக்கம் வென்று அசத்தியது. பைனலில் இத்தாலியுடன் மோதிய இந்தியா 6-0 என்ற புள்ளிக் கணக்கில் அபாரமாக வென்று முதலிடம் பிடித்தது. ஆண்கள் பிரிவில் இந்தியாவுக்கு வெண்கலப் பதக்கம் கிடைத்தது. 3வது இடத்துக்கான மோதலில் இந்தியா 6-0 என துருக்கியை வீழ்த்தியது.
from Dinakaran.com |03 Oct 2021 https://ift.tt/3D5MLon
via IFTTT
0 Comments