* தெற்காசிய அணிகள் மோதும் சாப் கோப்பை கால்பந்து சாம்பியன்ஷிப் தொடரில் இந்தியா - வங்கதேசம் நாளை மோதுகின்றன. இதுவரை நடந்துள்ள 12 தொடர்களில் இந்தியா 7 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.* மகளிர் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் தொடர், துருக்கியின் இஸ்தான்புல் நகரில் டிசம்பர் மாதம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொடருக்கான இந்திய அணி, அரியானாவில் நடைபெறும் தேசிய சாம்பியன்ஷிப் (அக். 21-27) முடிந்ததும் தேர்வு செய்யப்பட உள்ளது. ஆண்கள் உலக பாக்சிங் சாம்பியன்ஷிப் செர்பியாவின் பெல்கிரேடில் அக். 24ம் தேதி தொடங்கி நவ.6 வரை நடைபெறும்.* நார்வேயில் நடக்கும் உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் ஆண்கள் 61 கிலோ எடை பிரிவில் நடப்பு சாம்பியன் பெகா லாம்டட்ஸேவை வீழ்த்தி அதிர்ச்சியளித்த இந்திய வீரர் ரவீந்தர், காலிறுதியில் அமெரிக்காவின் டாட்டன் டுவைன் பிக்சிடம் போராடி தோற்றார்.* இந்திய ஆண்கள் ஹாக்கி அணிக்கான தேசிய பயிற்சி முகாம் பெங்களூருவில் உள்ள இந்திய விளையாட்டு ஆணைய வளாகத்தில் நாளை தொடங்குகிறது. இதில் பங்கேற்கும் 30 வீரர்கள் அடங்கிய பட்டியலை ஹாக்கி இந்தியா நேற்று வெளியிட்டது.* அஸ்தானா ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு பைனலில் பெல்ஜியம் வீராங்கனை அலிசான் வான் 1-6, 6-4, 6-3 என்ற செட் கணக்கில் கஜகஸ்தானின் யூலியா புடின்செவாவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.
from Dinakaran.com |03 Oct 2021 https://ift.tt/3osmIDL
via IFTTT
0 Comments