ஜோதிடம்

இஸ்லாமாபாத்: தலிபான் அரசுக்கு இதுவரையில் அங்கீகாரம் அளிக்காத பாகிஸ்தான், அந்நாட்டு தூதர்கள் பதவியேற்றதை அமைதியாக நடத்தி முடித்துள்ளது. ஆப்கானிஸ்தானில் அமெரிக்க படைகள் வெளியேறிய பிறகு அந்நாடு தலிபான்கள் வசமானது. இவர்கள் அமைத்த இடைக்கால அரசை உலக நாடுகள் அங்கீகரிக்கவில்லை. ஆப்கானிஸ்தானில் அமைச்சர்கள் நியமனத்தில் பாகிஸ்தான் தலையீடு இருந்தது. ஆனால், அதை தலிபான்கள் ஏற்கவில்லை. இதனால் அதிருப்தியடைந்த பாகிஸ்தான், தலிபான்களின் அரசுக்கு இதுவரையில் வெளிப்படையான அங்கீகாரம் வழங்கவில்ைல.  ஒரு நாடு, இன்னொரு நாட்டு அரசை அங்கீகரிக்கவில்லை என்றால், அதன் தூதர்கள் அங்கு பதவியேற்க முடியாது. ஆனால், பாகிஸ்தானுக்கான ஆப்கான் தூதராக அறிவிக்கப்பட்ட சர்தார் முகமது ஷோகிப், பாகிஸ்தானில் நேற்று ஓசைப்படாமல் அப்பதவியை ஏற்று, பணியை தொடங்கி உள்ளார். இதேபோல், பெஷாவர், கட்டா, கராச்சியில் உள்ள ஆப்கானிஸ்தான் துணை தூதரக அலுவலகங்களுக்கும் முறையே ஹபீஸ் மோகிபுல்லா, முல்லா குலாம் ரசூல், முல்லா முகமது அப்பாஸ்’ ஆகியோர் துணைத் தூதர்களாக நியமிக்கப்பட்டு, பதவியேற்றுள்ளனர். இது குறித்து பாகிஸ்தான் வெளியுறவு அலுவலக செய்தி தொடர்பாளர் அசிம் இப்திகார் கூறுகையில், ‘‘இது, பாகிஸ்தானின் நிர்வாக விவகாரம் சம்பந்தப்பட்டது. பாகிஸ்தானில் லட்சக்கணக்கான ஆப்கான் அகதிகள் உள்ளனர். அவர்களின் விவகாரத்தை கையாள, இங்கு ஆப்கான் நாட்டு தூதரகம் செயல்பட வேண்டியது அவசியமாகி உள்ளது,’’ என்றார்.



from Dinakaran.com |31 Oct 2021 https://ift.tt/2Y3G0om
via IFTTT

Post a Comment

0 Comments