சார்ஜா: உலகக்கோப்பை டி20யில் இலங்கை அணிக்கு 164 ரன்களை வெற்றி இலக்காக இங்கிலாந்து அணி நிர்ணயித்தது. ஷார்ஜாவில் நடைபெற்று வரும் போட்டியில் டாஸ் வென்ற வென்ற இலங்கை அணியின் கேப்டன் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 163 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து 164 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி 19 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 137 ரன்கள் எடுத்து தோல்வியை தழுவியது.
from Dinakaran.com |02 Nov 2021 https://ift.tt/3jSKC8f
via IFTTT
0 Comments