* தென் ஆப்ரிக்கா-வங்கதேசம் அணிகள் இதுவரை 6 சர்வதேச டி20ல் விளையாடி உள்ளன. அதில் தென் ஆப்ரிக்கா 6-0 என முழுமையாக ஆதிக்கம் செலுத்தியுள்ளது. அதிகபட்சமாக தென் ஆப்ரிக்கா 224 ரன், வங்கதேசம் 175 ரன் குவித்துள்ளன. குறைந்தபட்சமாக தென் ஆப்ரிக்கா 118 ரன், வங்கதேசம் 96 ரன் எடுத்துள்ளன.* உலக கோப்பை டி20ல் ஒரே ஒரு முறை மட்டுமே மோதியுள்ளன (2007). அப்போட்டியில் தென் ஆப்ரிக்கா 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றுள்ளது (வங்கதேசம் 19.3 ஓவரில் 144 ரன் ஆல் அவுட்; தென் ஆப்ரிக்கா 18.5 ஓவரில் 146/3).* பாகிஸ்தான் - நமீபியா அணிகள் இதுவரை சர்வதேச டி20ல் மோதியதில்லை. 2003ல் நடந்த ஐசிசி ஒருநாள் உலககோப்பை தொடரில் கடைசியாக மோதியதில் பாகிஸ்தான் 171 ரன் வித்தியாசத்தில் வென்றுள்ளது. 18 ஆண்டுகளுக்கு பிறகு இரு அணிகளும் மோத உள்ளன. நமீபியாவுக்கு இதுதான் முதல் டி20 உலக கோப்பை தொடர்.
from Dinakaran.com |02 Nov 2021 https://ift.tt/31nejIo
via IFTTT
0 Comments