சென்னை: தமிழ்நாடு ஜிம்னாஸ்டிக் சங்கத்தில் ஏற்பட்ட குளறுபடிகள் காரணமாக சிலர் 2017ல் வழக்கு தொடர்ந்தனர். அதை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் கடந்த ஆண்டு நவம்பரில், புதிதாக தேர்தலை நடத்த உத்தரவிட்டதுடன் தேர்தல் அதிகாரியாக வக்கீல் சந்திரகுமாரை நியமித்தது. இம்மாதம் 14ம் தேதி தேர்தல் நடைபெற இருந்த நிலையில், ஒவ்வொரு பதவிக்கும் ஒருவருக்கு மேல் யாரும் போட்டியிடததால் அனைவரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். அதன்படி மாநில தலைவராக முன்னாள் ஜிம்னாஸ்டிக் வீரர் பி.எம்.ரோகபரணி தேர்வு செய்யப்பட்டார். இவர் கடலூர் மாவட்ட ஜிம்னாஸ்டிக் சங்க தலைவராகவும் உள்ளார். காஞ்சிபுரம் மாவட்ட ஜிம்னாஸ்டிக் சங்க தலைவர் ஜி.பாலா மாநில பொதுச் செயலாளராகவும், சென்னை மாவட்ட ஜிம்னாஸ்டிக் சங்க தலைவி ஸேரன் சாரஸ் மாநிலப் பொருளாளராகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
from Dinakaran.com |09 Nov 2021 https://ift.tt/3C1ggXw
via IFTTT
0 Comments