ஜோதிடம்

இங்கிலாந்து  கால்பந்து கிளப் ‘ஆஸ்டன் வில்லா’ அணியின்  தலைமை பயிற்சியாளராக இருந்த டீன் ஸ்மித்துக்கு பதிலாக  புதிய பயிற்சியாளராக  ஸ்டீவன் ஜெர்ராடு   நியமிக்கப்பட்டு உள்ளார். கடந்த மூன்றரை ஆண்டுகளாக  ஸ்காட்லாந்தின் ரேஞ்சர்ஸ் எப்சி அணியின் பயிற்சியாளராக  ஸ்டீவன் இருந்தார்.  இங்கிலாந்து தேசிய அணி, லிவர்பூல் அணிகளின் கேபட்னாக ஸ்டீவன் இருந்துள்ளார். இங்கிலாந்து தேசிய அணிக்காக 118 ஆட்டங்களிலும், லிவர்பூல் அணிக்காக 504 ஆட்டங்களிலும் விளையாடி இருக்கிறார். இங்கிலீஷ் பிரிமீயர் லீக் தொடரில் பாதி ஆட்டங்கள் முடிந்த நிலையில் ஆஸ்டன் வில்லா வெறும் 3 வெற்றிகளுடன் 16வது இடத்தில் உள்ளது.



from Dinakaran.com |12 Nov 2021 https://ift.tt/3CbxGke
via IFTTT

Post a Comment

0 Comments