ஜோதிடம்

கிறைஸ்ட்சர்ச்: நியூசிலாந்து அணியுடனான 2வது டெஸ்டில், தென் ஆப்ரிக்கா நிதானமாக விளையாடி ரன் குவித்து வருகிறது. ஹேக்லி ஓவல் மைதானத்தில் நேற்று தொடங்கிய இப்போட்டியில், டாஸ் வென்று பேட் செய்த தென் ஆப்ரிக்கா முதல் நாள் ஆட்ட முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 238 ரன் எடுத்துள்ளது. கேப்டன் டீன் எல்கர் 41 ரன், சரெல் எர்வீ 108 ரன் (221 பந்து, 14 பவுண்டரி), மார்க்ரம் 42 ரன் விளாசி ஆட்டமிழந்தனர். வாண்டெர் டஸன் 13, பவுமா 22 ரன்னுடன் களத்தில் உள்ளனர். நியூசி. பந்துவீச்சில் சவுத்தீ, ஹென்றி, வேக்னர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இன்று 2வது நாள் ஆட்டம் நடக்கிறது.



from Dinakaran.com |26 Feb 2022 https://ift.tt/fOnDB5b
via IFTTT

Post a Comment

0 Comments