ஜோதிடம்

சென்னை: சத்தீஸ்கர் அணியுடனான ரஞ்சி கோப்பை லீக் போட்டியில்,  தமிழகம் முதல் இன்னிங்சில் 9 விக்கெட் இழப்புக்கு  470 ரன் குவித்து டிக்ளேர் செய்தது. கவுகாத்தியில் நடந்து வரும் இப்போட்டியில், டாஸ் வென்று பேட் செய்த தமிழகம் முதல் நாள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 308 ரன் எடுத்திருந்தது. இந்திரஜித் 127 ரன் விளாசி ஆட்டமிழந்தார். அபராஜித் 101 ரன், ஷாருக்கான் 28 ரன்னுடன் நேற்று ஆட்டத்தை தொடர்ந்தனர்.  ஷாருக்கான் 69 ரன்னில் வெளியேறினார். ஜெகதீசன் (0), சாய் கிஷோர் 19, முகமது 18 ரன் எடுத்து பெவிலியன் திரும்பினர். சிறப்பாக விளையாடிய அபராஜித் 166 ரன் (267 பந்து, 15 பவுண்டரி, 4 சிக்சர்) விளாசி ஆட்டமிழந்தார். தமிழகம் 9 விக்கெட் இழப்புக்கு 470 ரன்  என்ற ஸ்கோருடன் (118 ஓவர்) முதல் இன்னிங்சை டிக்ளேர் செய்தது. சித்தார்த் 6 ரன்னுடன் களத்தில் இருந்தார். சத்தீஸ்கர்  தரப்பில்  சுமித் 4, அஜய் மண்டல் 3 விக்கெட் எடுத்தனர். அடுத்து முதல் இன்னிங்சை  தொடங்கிய சத்தீஸ்கர், 2ம் நாள் முடிவில்  5 விக்கெட் இழப்புக்கு 105 ரன் எடுத்துள்ளது.  ஹர்பிரீத் சிங் 47 ரன்,  ஷசாங் சிங் (0) களத்தில் உள்ளனர்.



from Dinakaran.com |26 Feb 2022 https://ift.tt/3AxtYhH
via IFTTT

Post a Comment

0 Comments