ஜோதிடம்

* இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் 3 ஒருநாள் போட்டிகள் அகமதாபாத் மோடி ஸ்டேடியத்தில் நடைபெற உள்ளன. கொரோனா தொற்று அச்சுறுத்தல் காரணமாக, இந்த போட்டிகள் அனைத்தும் பூட்டிய அரங்கில் ரசிகர்கள் இன்றி நடைபெறும் என குஜராத் கிரிக்கெட் சங்கம் நேற்று அறிவித்துள்ளது. பிப். 6ம் தேதி நடக்க உள்ள முதல் போட்டி, இந்திய அணி விளையாடும் 1000வது ஒருநாள் போட்டியாகும். கொல்கத்தாவில் நடைபெற உள்ள 3 டி20 போட்டிகளுக்கு 75 சதவீத பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என மேற்கு வங்க அரசு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.* காமன்வெல்த் விளையாட்டு போட்டித் தொடரில் 24 ஆண்டுகளுக்குப் பிறகு கிரிக்கெட் மீண்டும் இடம் பெறுகிறது. இங்கிலாந்தின் பர்மிங்காமில் நடைபெற உள்ள இந்த போட்டியில் (ஜூலை 28 - ஆகஸ்ட் 8), மகளிர் டி20 சேர்க்கப்பட்டுள்ளது. இதில் இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, இலங்கை, தென் ஆப்ரிக்கா, நியூசிலாந்து, பாகிஸ்தான், பார்படாஸ்  ஆகிய 8 அணிகள் களமிறங்குகின்றன. லீக் மற்றும் நாக் அவுட் அடிப்படையில் போட்டிகள் நடைபெறும்.* அர்ஜென்டினா டென்னிஸ் நட்சத்திரம் ஜுவன் மார்டின் டெல்போட்ரோ கடைசியாக 2019 ஜூன் மாதம் களமிறங்கி விளையாடி இருந்தார். அதன் பிறகு முழங்கால் மூட்டு காயத்துக்காக 4 முறை அறுவைசிகிச்சை செய்துகொண்டு ஓய்வெடுத்து வந்தார். இந்நிலையில், மீண்டும் விளையாடத் தயாராகி உள்ள அவர் அடுத்த மாதம் நடைபெற உள்ள அர்ஜென்டினா ஓபனில்,  ‘வைல்டு கார்டு’ சிறப்பு அனுமதியுடன் களமிறங்குவதை உறுதி செய்துள்ளார்.* புரோ கபடி தொடரில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் குஜராத் ஜயன்ட்ஸ் அணி 34-25 என்ற புள்ளிக் கணக்கில் பெங்கால் வாரியர்ஸ் அணியை வீழ்த்தியது.



from Dinakaran.com |02 Feb 2022 https://ift.tt/mhSitgR73
via IFTTT

Post a Comment

0 Comments