துபாய்: ஐசிசி ஒருநாள் மகளிர் தரவரிசைப் பட்டியலில் இந்தியாவின் மிதாலி ராஜ் ஒரு இடம் முன்னேறி 2வது இடத்தை கைப்பற்றியுள்ளார். ஒருநாள், டெஸ்ட் போட்டிகளுக்கான மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் மிதாலி ராஜ் (39). ஒருநாள் போட்டிக்கான ஐசிசி பேட்டிங் தரவரிசையில் இவர் பலமுறை முதலிடம் வகித்துள்ளார். சமீபத்தில் போட்டிகள் இல்லாததால் 3வது இடத்திற்கு தள்ளப்பட்டார். இந்நிலையில் ஐசிசி நேற்று வெளியிட்ட ஒருநாள் பேட்டிங் தரவரிசையில் மிதாலி (738 புள்ளி) ஒரு இடம் முன்னேறி 2வது இடத்தை பிடித்துள்ளார். ஆஸ்திரேலிய வீராங்கனை அலிஷா ஹீலி (750) தொடர்ந்து முதல் இடத்தில் நீடிக்கிறார்.இந்திய நட்சத்திரம் ஸ்மிரிதி மந்தனா 710 புள்ளிகளுடன் 6வது இடத்தில் இருக்கிறார். இந்திய வீராங்கனைகள் ஹர்மன்பிரீத் கவுர் 18வது இடத்திலும், தீப்தி சர்மா 19வது இடத்திலும், பூனம் ராவுத் 21வது இடத்திலும் உள்ளனர். பந்து வீச்சாளர்களுக்கான தர வரிசையில் எந்த மாற்றமும் இல்லை. முதல் 3 இடங்களில் ஜெஸ் ஜோனசன் (ஆஸி., 760 புள்ளி), ஜுலன் கோஸ்வாமி (இந்தியா, 727), மேகான் ஷுட் (ஆஸி., 717) உள்ளனர். மற்ற இந்திய வீராங்கனைகளான பூனம் யாதவ் 13, ஷிகா பாண்டே 17, தீப்தி சர்மா 19வது இடங்களில் உள்ளனர். ஆல் ரவுண்டருக்கான தரவரிசையில் தீப்தி சர்மா (299) ஒரு இடம் முன்னேறி 4வது இடத்தை பிடித்துள்ளார். ஜுலன் கோஸ்வாமி 11வது இடத்திலும், ஷிகா பாண்டே 17வது இடத்திலும் உள்ளனர்.
from Dinakaran.com |02 Feb 2022 https://ift.tt/PgrTwkYJO
via IFTTT
0 Comments