* இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவர் நரிந்தர் பத்ரா, தனது பெயரில் போலி இ-மெயில் அனுப்பி மோசடி செய்து வரும் நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என டெல்லி போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்.* வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடருக்கான அணியில் இடம் பெறாத அனுபவ வேகப் பந்துவீச்சாளர்கள் ஜேம்ஸ் ஆண்டர்சன், ஸ்டூவர்ட் பிராடு இருவரும் இங்கிலாந்து அணிக்காக மீண்டும் விளையாடும் வாய்ப்பு உள்ளதாக இடைக்கால நிர்வாக இயக்குனர் ஆஸ்ட்ரூ ஸ்டிராஸ் தெரிவித்துள்ளார்.* வங்கதேச அணி தென் ஆப்ரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. இந்த தொடர்களுக்கான அட்டவணை நேற்று உறுதி செய்யப்பட்டது.* ஒருநாள் போட்டிகளுக்கான ஐசிசி பேட்டிங் தரவரிசையில் இந்தியாவின் விராத் கோஹ்லி (828), ரோகித் ஷர்மா (207) முறையே 2வது மற்றும் 3வது இடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளனர். பாகிஸ்தானின் பாபர் ஆஸம் (873) தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார்.* தலைமை பயிற்சியாளர் பதவியில் இருந்து ஜஸ்டின் லேங்கர் விலகியுள்ள நிலையில், ஆஸ்திரேலிய அணிக்கு புதிய பாணியிலான பயிற்சி தேவைப்படுவதாக கேப்டன் கம்மின்ஸ் கூறியுள்ளார்.* புரோ கபடி தொடரில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் அணி 39 - 41 என்ற புள்ளிக் கணக்கில் உ.பி.யோதா அணியிடம் போராடி தோற்றது.
from Dinakaran.com |10 Feb 2022 https://ift.tt/xeUXDIw
via IFTTT
0 Comments