ஜோதிடம்

குயின்ஸ்டவுன்: இந்திய மகளிர் அணியுடனான டி20 போட்டியில், நியூசிலாந்து 18 ரன் வித்தியாசத்தில் வென்றது. நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய மகளிர் அணி ஒரு டி20, 5 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது. குயின்ஸ்டவுனில் நேற்று நடந்த டி20 போட்டியில், டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்துவீச, நியூசிலாந்து அணி 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 155 ரன் எடுத்தது. அதிகபட்சமாக சூஸி பேட்ஸ் 36 ரன் (34 பந்து, 2 பவுண்டரி),  கேப்டன் ஷோபி டிவைன் 31 ரன் (23 பந்து, 2 பவுண்டரி, 2 சிக்சர்), லீ டஹுஹு 27 (14 பந்து, 4 பவுண்டரி, 1 சிக்சர்), மேடி கிரீன் 26 ரன் (20 பந்து, 3 பவுண்டரி) விளாசினர். இந்திய தரப்பில்  தீப்தி ஷர்மா, பூஜா வஸ்த்ராகர் தலா 2, ராஜேஷ்வரி கெயக்வாட் ஒரு விக்கெட் எடுத்தனர்.அடுத்து 156ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி, 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 137 ரன் மட்டுமே எடுத்து 18 ரன் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. இந்திய வீராங்கனைகளில்  அதிகபட்சமாக ஷபினேனி மேகனா 37 ரன் (30 பந்து, 6 பவுண்டரி), யாஸ்டிகா பாட்டியா 26 ரன் (26 பந்து, 2 பவுண்டரி, 1 சிக்சர்),  ஷபாலி வர்மா 13 ரன் (14 பந்து, 2 பவுண்டரி)  எடுத்தனர். நியூசி பந்துவீச்சில் ஜெஸ் கெர், அமேலியா கெர் ஹேலி ஜென்சன் தலா 2 , லீ டஹுஹு, ஷோபி டிவைன் தலா ஒரு விக்கெட் எடுத்தனர். ஒரே ஒரு போட்டி கொண்ட டி20 தொடரை கைப்பற்றிய நியூசி. கோப்பையையும் வசப்படுத்தியது. அடுத்து இரு அணிகளும் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் மோதுகின்றன. முதல் போட்டி பிப்.12ம் தேதி குயின்ஸ்டவுனில் நடக்க உள்ளது.



from Dinakaran.com |10 Feb 2022 https://ift.tt/D7niBIM
via IFTTT

Post a Comment

0 Comments