ஜோதிடம்

* ஜெர்மனி ஓபன் பேட்மின்டன் தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் இந்திய வீரர் கிடாம்பி ஸ்ரீகாந்த் 21-16, 21-23, 21-18 என நேர் செட்களில் சீனாவின் லு குவாங் சூவை  வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார். மகளிர் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் இந்தியாவின் பி.வி.சிந்து, சாய்னா நெவால் ஆகியோர் தோற்று வெளியேறினர்.* ஐரோப்பிய சாம்பியன் லீக் தொடரில் நேற்று நடைபெற்ற நாக் அவுட் 16 சுற்றுகளில் வெற்றிப் பெற்ற  ரியல் மாட்ரிட்(ஸ்பெயின்), மான்செஸ்டர் சிட்டி(இங்கிலாந்து) அணிகள் காலிறுதிக்கு முன்னேறியுள்ளன.* இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் வாயப்பு கிடைக்காத நிலையில் புஜாரா அடுத்த மாதம் தொடங்க உள்ள கவுண்டி கிரிக்கெட் தொடரில்  சக்சஸ் அணிக்காக விளையாட  இங்கிலாந்து செல்கிறார்.* உக்ரைன் கால்பந்து அணியின் முன்னாள் கேப்டன்  அனடோலி டிமோஷ்சுக்(42). உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்தது குறித்து  அனடோலி கண்டிக்காமல் அமைதியாக இருப்பதால் அவரை தண்டிக்கப்போவதாக அரசு அறிவித்துள்ளது.   அனடோலி ரஷ்யாவின் ‘செனிட் செயின்ட்’ என்ற கால்பந்து அணியின் பயிற்சியாளராக உள்ளார். அதற்காக இப்போது அவர் ரஷ்யாவில் தங்கி உள்ளார்.* வெஸ்ட் இண்டீசின் நார்த் சவுண்ட் நகரில் முதல் டெஸ்ட் ஆட்டம் நடக்கிறது. அதன் முதல் இன்னிஸ்சில்  ஜானி பேர்ஸ்டோ 140ரன் விளாச இங்கிலாந்து 311ரன் குவித்தது. தொடர்ந்து முதல்  இன்னிங்சை தொடங்கிய வெ.இண்டீஸ் 2வது நாள் ஆட்ட நேர முடிவில் 4விக்கெட் இழப்புக்கு 202 ரன் குவித்தது. களத்தில் இருந்த நிக்ருமா போன்னர் 34*,  ஜேசன் ஹோல்டர் 43* ரன்னுடன் 3வது நாளான நேற்று முதல் இன்னிங்சை  தொடர்ந்தனர்.



from Dinakaran.com |11 Mar 2022 https://ift.tt/Z9VEwpJ
via IFTTT

Post a Comment

0 Comments