* ஐரோப்பிய சாம்பியன் லீக் கால்பந்து தொடரில் ஜெர்மனியின் பேயர்ன் மியூனிக், இங்கிலாந்தின் லிவர்பூல் ஆகிய அணிகள் காலிறுதிக்கு முன்னேறியுள்ளன. கோல் மழை பொழிந்த பேயர்ன் அணியின் ராபர்ட் லெவண்டோவ்ஸ்கி ஹாட்ரிக் கோல் அடித்து அசத்தினார்.* பெண்கள் தினத்தை முன்னிட்டு தமிழக காங்கிரஸ் சார்பில் ‘சாதித்த’ விளையாட்டு வீராங்கனைகளுக்கு ‘சோனியா காந்தி விருது’ வழங்கும் நிகழ்ச்சி நேற்று சென்னையில் நடந்தது. இந்த விருது பவர் லிப்டிங் வீராங்கனை டாக்டர் ஆர்த்தி அருண், இந்திய கிரிக்கெட் வீராங்கனை ஹேமலதா உட்பட பலருக்கு வழங்கப்பட்டன.* ஐஎஸ்எல், ஐ லீக் உள்ளிட்ட உள்நாட்டு தொடர்களில் ஆசிய கால்பந்து கூட்டமைப்பு(ஏஎப்சி) விதிகளின்படி அதிக எண்ணிக்கையில் வெளிநாட்டு வீரர்களை சேர்ப்பது இந்திய கால்பந்து அணியை தற்கொலை செய்வதற்கு சமம்’ என்று இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் இகார் ஸ்டிமாக்(குரேஷியா) தெரிவித்துள்ளார்.* உக்ரைன் மீது ரஷ்யா படையெடுப்பை தொடர்ந்து ‘ரஷ்ய கால்பந்து அணிகள் மறு அறிவிப்பு வரும் வரை சர்வதேச போட்டிகளில் பங்கேற்க தடை விதிப்பதாக’ சர்வதேச, ஐரோப்பிய கால்பந்து கூட்டமைப்புகள் அறிவித்துள்ளன. அதனை எதிர்த்து ரஷ்ய கால்பந்து கூட்டமைப்பு மேல்முறையீடு செய்துள்ளது.* ‘இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா பங்கேற்கும் முத்தரப்பு போட்டிகளை நடத்த தயாராக இருக்கிறோம்’ என்று கிரிக்கெட் ஆஸ்திரேலியா அமைப்பின் தலைவர் நிக் ஹாக்லே தெரிவித்துள்ளார்.* ஜெர்மன் ஓபன் பேட்மின்டன் போட்டியின் கலப்பு இரட்டையர் பிரிவின் முதல் சுற்றில் இந்தியாவின் சாய் பிரதீக், சிக்கி ரெட்டி இணை நேற்று 19-21, 8-21 என நேர் செட்களில் தாய்லாந்தின் டெச்சாபோல், சப்சீறி இணையிடம் தோற்று வெளியேறியது. இந்தப் பிரிவில் மற்ற இந்திய இணைகளான அர்ஜூன்-தெரசா, துருவ்-காயத்ரி, இஷான்-தனிஷா ஆகியோரும் முதல் சுற்றுடன் வெளியேறி உள்ளனர்.* இங்கிலாந்தைச் சேர்ந்த மெரில்போன் கிரிக்கெட் கிளப்(எம்சிசி) தான் சர்வதேச கிரிக்கெட் விதிகளை வரையறை செய்கிறது. சமீபத்தில் எம்சிசி 9 விதிகளில் மேற்கொண்ட மாற்றங்கள் பெரும்பாலும் வரவேற்பையும், சிறிய அளவில் எதிர்ப்பையும் பெற்றுள்ளன.
from Dinakaran.com |10 Mar 2022 https://ift.tt/Zh6rSEz
via IFTTT
0 Comments