ஜோதிடம்

ரங்கியோரா: ஐசிசி மகளிர் உலக கோப்பை பயிற்சி ஆட்டங்களில் இங்கிலாந்து அணி தென் ஆப்ரிக்காவையும், பாகிஸ்தான் அணி வங்கதேசத்தையும் வீழ்த்தின. ரங்கியோராவில் நேற்று நடந்த இங்கிலாந்து - தென் ஆப்ரிக்கா இடையிலான ஆட்டம் மழை காரணமாக தாமதமாகத் தொடங்கியது. ஓவர்களின் எண்ணிக்கையும் 35 ஆக குறைக்கப்பட்டது. டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீசிய நிலையில், தென் ஆப்ரிக்கா 35 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 138 ரன் எடுத்தது. அதிகபட்சமாக மரிஸேன் காப் 52 ரன் விளாசினார். இங்கிலாந்து தரப்பில் ஷோபி 3, அன்யா 2 விக்கெட் எடுத்தனர். அடுத்து களமிறங்கிய இங்கிலாந்து  26.2 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 139 ரன் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. டாமி பியூமான்ட் 35, நதாலியே ஸ்கிவர் 33 ரன், ஏமி ஜோன்ஸ் 20 ரன் எடுத்தனர். தென் ஆப்ரிக்கா தரப்பில் அயபோங்கா 2 விக்கெட் எடுத்தார்.மற்றொரு பயிற்சி ஆட்டத்தில் பாகிஸ்தான் - வங்கதேசம் மோதின. இப்போட்டியும் மழை காரணமாக 42 ஓவர்களாக குறைக்கப்பட்டு நடந்தது. டாஸ் வெறு பேட் செய்த பாகிஸ்தான் 42 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 199 ரன் எடுத்தது.   அதிகபட்சமாக அலியா ரியாஸ் ஆட்டமிழக்காமல் 45 ரன் விளாசினார். ஜவேரியா கான் 44 ரன், கேப்டன் பிஸ்மா மரூப் 32, பாத்திமா சனா 29 ரன் எடுத்தனர். வங்கதேச தரப்பில் ரிட்டு மோனி, பரிஹா டிரிஷ்னா தலா 3 விக்கெட் அள்ளினர்.அடுத்து களமிறங்கிய வங்கதேசத்துக்கு டி/எல் விதிப்படி 42 ஓவரில் 202 ரன் எடுத்தால் வெற்றி என இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. அந்த அணி 41.2 ஓவரில் 194 ரன் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டாக, பாகிஸ்தான் 7 ரன் வித்தியாசத்தில் வெற்றியை வசப்படுத்தியது. ஃபர்கானா 71 ரன், ருமானா அகமது 30 ரன் விளாசினர். பாகிஸ்தான் தரப்பில் பாத்திமா 4, நஷ்ரா 3 விக்கெட் எடுத்தனர்.பயிற்சி ஆட்டங்கள் நிறைவுற்ற நிலையில், ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் மகளிர் உலக கோப்பை தொடர் நாளை தொடங்குகிறது.



from Dinakaran.com |03 Mar 2022 https://ift.tt/YP2UkNQ
via IFTTT

Post a Comment

0 Comments