ஜோதிடம்

ஐபிஎல் டி20 தொடரின் 15வது சீசன் மார்ச் 26ம் தேதி தொடங்கி மே 29 வரை நடைபெற உள்ளது. இந்த நிலையில், மார்ச் 26 முதல் ஏப்ரல் 15 வரை நடைபெற உள்ள முதற்கட்ட லீக் போட்டிகளுக்கு 25 சதவீத ரசிகர்களை அனுமதிக்க பிசிசிஐ மற்றும் மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்கம் முடிவு செய்துள்ளன. அதன் பிறகு கொரோனா சூழல் எவ்வாறு உள்ளது என்பதை ஆய்வு செய்து அதன் அடிப்படையில் கூடுதலாக ரசிகர்களை அனுமதிப்பது குறித்து அறிவிக்கப்படும்.* தீபக் சாஹர் காயம்சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வேகப் பந்துவீச்சாளர் தீபக் சாஹர் காயம் அடைந்துள்ளது, அந்த அணிக்கு பெரும் பின்னடைவை கொடுத்துள்ளது. கடந்த மாதம் வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் விளையாடியபோது ஏற்பட்ட காயம் இன்னும் முழுமையாக குணமடையாததால், ஐபிஎல் டி20 தொடரின் 15வது சீசனில் பெரும்பாலான ஆட்டங்களில் அவர் களமிறங்க முடியாது என தகவல் வெளியாகி உள்ளது. பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமி வளாகத்தில், சாஹர் தனது உடல்தகுதியை மேம்படுத்துவதற்காக சிகிச்சை மற்றும் உடற்பயிற்சி மேற்கொண்டுள்ளார். மருத்துவர்களின் அறிக்கையை பொறுத்து மாற்று ஏற்பாடு பற்றி ஆலோசிக்க உள்ளதாக சிஎஸ்கே தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.



from Dinakaran.com |03 Mar 2022 https://ift.tt/l73z6LX
via IFTTT

Post a Comment

0 Comments