ஜோதிடம்

டுயன்டின்: ஐசிசி மகளிர் உலக கோப்பையில்  முதல்முறையாக  இங்கிலாந்தை வீழ்த்தி வெஸ்ட் இண்டீஸ் தொடரில் 2வது வெற்றியை பதிவு செய்துள்ளது. ஐசிசி மகளிர் உலக கோப்பையில் நேற்று நடந்த 7வது லீக் ஆட்டத்தில்  வெஸ்ட் இண்டீஸ்-இங்கிலாந்து மகளிர் அணிகள் மோதின.  இதுவரை உலக கோப்பைத் தொடர்களில்  வெஸ்ட் இண்டீசிடம் தோற்றதில்லை என்ற பெருமையுடன் இங்கிலாந்து களமிறங்கியது. டாஸ் வென்ற வெ.இண்டீஸ் முதலில் விளையாடி 50ஓவர் முடிவில்  6விக்கெட் இழப்புக்கு 225ரன் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக   ஷீமைன்  66, சேடீன் 49,  ஹெய்லே 45, தியேந்திரா 31ரன் எடுத்தனர். இங்கிலாந்து தரப்பில் ஷோபி 3விக்கெட் எடுத்தார்.தொடர்ந்து 226ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன்  இங்கிலாந்து விளையாடியது. அடுத்தடுத்து விக்கெட்களை இழந்தாலும் டாம்மி 46, ஷோபியா 38,  டேன்னி 33 ரன் எடுத்து ஸ்கோர் உயர உதவினர். ஒருகட்டத்தில் இங்கிலாந்து  24 பந்தில்  14ரன் எடுத்தால் வெற்றி என்ற நிலைமையில் இருந்தது. அப்போது 46ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு  212ரன் எடுத்திருந்தது. ஆனால் 48வது ஓவரை வீசிய அனிசா எஞ்சிய 2 விக்கெட்களையும் வீழ்த்த இங்கிலாந்து ஆட்டம் முடிவுக்கு வந்தது. அந்த அணி 47.4ஓவரில் 218ரன் எடுத்து 7 ரன் வித்தியாசத்தில் தோற்றது. மகளிர் உலக கோப்பை வரலாற்றில் வெ.இண்டீஸ் முதல்முறையாக இங்கிலாந்தை வீழ்த்தி உள்ளது. அத்துடன் தொடரில் 2வது வெற்றியை பதிவு செய்ய, இங்கிலாந்து 2வது தோல்வியை சந்தித்துள்ளது. வெ.இண்டீஸ் வீராங்கனை  ஷீமைன்  ஆட்டத்தின் சிறந்த வீராங்கனையாக தேர்வு செய்யப்பட்டார்.



from Dinakaran.com |10 Mar 2022 https://ift.tt/UpAyRvE
via IFTTT

Post a Comment

0 Comments