ஜோதிடம்

* தொடர் தோல்விகளால் தள்ளாடி வரும் மும்பை இந்தியன்ஸ் அணியில் வேகப் பந்துவீச்சாளர் தவால் குல்கர்னி (33 வயது) இணைந்துள்ளார். * 6 அணிகள் பங்கேற்கும் புதிய டி20 லீக் தொடர் அடுத்த ஆண்டு ஜனவரியில் நடத்தப்படும் என்று தென் ஆப்ரிக்க கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. ஒரு மாத காலத்தில் லீக் சுற்று, பிளே ஆப் என மொத்தம் 33 ஆட்டங்கள் நடைபெற உள்ளன. களமிறங்கு ஒவ்வொரு அணியிலும் 4 வெளிநாட்டு வீரர்கள் இடம் பெற அனுமதிக்கப்படும்.* ஜூனியர் ஆசிய கோப்பை வில்வித்தை (2ம் கட்டம்) தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொடர் ஈராக்கின் சுலைமானியா நகரில் மே 6ம் தேதி தொடங்கி 11ம் தேதி வரை நடைபெற உள்ளது.* இலங்கையில் ஜூன் மாதம் சுற்றுப்பயணம் செய்து டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடர்களில் விளையாட உள்ள ஆஸ்திரேலிய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. டி20 தொடரில் டெஸ்ட் கேப்டன் பேட் கம்மின்சுக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது. டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளுக்கு ஆரோன் பிஞ்ச் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.



from Dinakaran.com |30 Apr 2022 https://ift.tt/3uoEm8b
via IFTTT

Post a Comment

0 Comments