* சிறந்த வீரராக இருந்தால்...மும்பை இந்தியன்ஸ் அணியில் சச்சின் மகன் அர்ஜூன் டென்டுல்கர் இருக்கிறார். ஆனால் கடந்த 2 ஆண்டுகளாக வாய்ப்பு இல்லை. இது குறித்து பயிற்சியாளர் மஹிலா ஜெயவர்த்தனே, ‘மிகவும் சிறந்த வீரர்களை களத்துக்கு கொண்டு வருகிறோம். அவர்களின் ஒருவராக அர்ஜூனும் இருந்தால் நிச்சயம் பரிசீலிப்போம்’ என்ற கூறியுள்ளார். ‘அப்படியானால் அர்ஜூன் சிறந்த வீரர் இல்லையா’ என்ற கேள்வி சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.* பரிசுத் தொகை உயர்வுகிராண்ட் ஸ்லாம் போட்டிகளின் ஒன்றான பிரஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி மே 22ம் தேதி தொடங்குகிறது. இந்நிலையில் பல்வேறு பிரிவுகளில் வெற்றி பெறுபவர்களுக்கான பரிசுத் தொகை உயர்த்தப்பட்டுள்ளன. ஒற்றையர் பிரிவுகளில் வெல்லும் வீரர், வீராங்கனைக்கு தலா 2.2மில்லியன் யுரோ(ரூ.17.74கோடி) பரிசுத் தொகை கிடைக்கும்.* விலகினார் மர்ரேமாட்ரிட் ஓபன் 3வது சுற்றில் உலகின் நெம்பர் 1 வீரர் ஜோகோவிச்சை(செர்பியா) எதிர்த்து விளையாட இருந்த முன்னாள் நெம்பர ஒன் வீரர் ஆண்டி மர்ரே(இங்கிலாந்து) உடல்நிலை குறைவு காரணமாக போட்டியில் இருந்து விலகினார். அதனால் ஜோகோவிச் காலிறுதிக்கு முன்னேறினார்.* தமிழ்நாடு கபடி லீக்தமிழ்நாடு அமெச்சூர் கபடி சங்கத்தின் ஒத்துழைப்புடன் லைகேன் நிறுவனம் ‘தமிழ்நாடு கபடி பிரிமீயர் லீக்’ போட்டியை நடத்த உள்ளது. ஜூலை 18ம் தேதி முதல் 23ம் தேதி வரை நடைபெற உள்ள இந்தப் போட்டியில் சென்னை, வேலூர், சேலம், தஞ்சாவூர், திருச்சி, மதுரை, கோவை, திருநெல்வேலி மாவட்டங்களைச் சேர்ந்த அணிகள் பங்கேற்கின்றன.
from Dinakaran.com |06 May 2022 https://ift.tt/tlMeKWd
via IFTTT
0 Comments