ஜோதிடம்

நியூசிலாந்து கிரிக்கெட் வீரர் அஜாஸ் படேல்(33). 2021ம் ஆண்டு டிசம்பர் மாதம் மும்பையில் நடந்த  இந்தியாவுக்கு எதிரான 2வது டெஸ்ட் ஆட்டத்தில் ஒரே இன்னிங்சில் அஜாஸ் 10 விக்கெட்களையும் அள்ளினார். இப்படி 10 விக்கெட்களையும் வாரிய ஜிம் லேக்கர்(இங்கிலாந்து), அனில் கும்ப்ளே(இந்தியா) வரிசையில் 3வது வீரராக அஜாஸ் இணைந்தார். இந்நிலையில் அந்த ஆட்டத்தில் அணிந்திருந்த தனது சீருடையை  ‘ஸ்டார்ஷிப்’ என்ற தொண்டு நிறுவனத்துக்கு நேற்று  நன்கொடையைாக அஜாஸ் வழங்கினார். ஸ்டார்ஷிப் குழந்தை நோயாளிகளுக்கு தேவையான வசதிகளை செய்து தரும் பணியை செய்கிறது. அந்த நிறுவனம் நியூசி வீரர்களின் கையெழுத்துகள் உள்ள அஜாசின் சீருடையை விரைவில்  ஏலத்தில் விட்டு நிதி திரட்ட உள்ளது.



from Dinakaran.com |06 May 2022 https://ift.tt/4mTUukq
via IFTTT

Post a Comment

0 Comments