2022 மகளிர் ஹாக்கி உலகக் கோப்பை | கோல் பதிவு செய்ததும் காதலனிடம் காதலை சொன்ன சிலி வீராங்கனை

ஆம்ஸ்டெல்வீன்: நடப்பு மகளிர் ஹாக்கி உலகக் கோப்பை தொடரின் குரூப் சுற்றுப் போட்டியில் முதல் கோலை பதிவு செய்ததும் தனது காதலனிடம் காதலை தெரிவித்துள்ளார் சிலி நாட்டை சேர்ந்த வீராங்கனை பிரான்சிஸ்கா தலா (Francisca Tala).

15-வது மகளிர் ஹாக்கி உலகக் கோப்பை தொடர் நெதர்லாந்து மற்றும் ஸ்பெயின் நாட்டில் நடைபெற்று வருகிறது. மொத்தம் 16 அணிகள் இதில் பங்கேற்று விளையாடி வருகின்றன. கடந்த 1-ஆம் தேதி தொடங்கிய இந்த தொடர் வரும் 17-ஆம் தேதி வரை நடைபெறும். இதில் முதல் சுற்றில் சிலி அணி ‘ஏ’ பிரிவில் விளையாடியது. அந்த அணி ஒரு வெற்றி மற்றும் இரண்டு தோல்விகளுடன் காலிறுதிக்கு முந்தைய நாக்-அவுட் போட்டியான கிராஸ்-ஓவரில் பெல்ஜியம் அணியை எதிர்த்து விளையாடுகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Post a Comment

0 Comments