* விம்பிள்டன் கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்றாலும் ஜோகோவிச் தரவரிசையில் 3வது இடத்தில் இருந்து 7வது இடத்துக்கு பின்தங்கியுள்ள விநோதம் நிகழ்ந்துள்ளது. உக்ரைன் போர் பிரச்னை காரணமாக ரஷ்யா, பெலாரஸ் வீரர், வீராங்கனைகள் விம்பிள்டனில் பங்கேற்க அனுமதிக்கப்படாததால், இந்த தொடருக்கு தரவரிசை புள்ளிகள் கிடையாது என்று அறிவிக்கப்பட்டது. அதனால் சாம்பியனுக்கு கிடைக்க வேண்டிய 2000 புள்ளிகள் ஜோகோவிச்சுக்கு வழங்கப்படவில்லை. மாறாக 2000 புள்ளிகள் குறைக்கப்பட்டதால் அவர் 3வது இடத்தில் இருந்து 7 இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார். * டிஎன்சிஏ முன்னாள் பொருளாளர் ஆர். சந்திரசேகரன் (83) நேற்று காலமானார். முன்னாள் கிரிக்கெட் வீரரான அவர் நடுவர், தேர்வாளர், அணி மேலாளர் என பல்வேறு பொறுப்புகளை டிஎன்சிஏவில் வகித்துள்ளார். எஸ்பிஐ வங்கியில் பணியாற்றிய சந்திரசேகரன் அந்த வங்கிக்காகவும் கிரிக்கெட் விளையாடி உள்ளார். மேலும் அறிமுக, புதுமுக வீரர்களை கண்டறிந்து ஊக்குவிக்கும் பணியை அவர் தொடர்ந்து செய்து வந்தார். அவரது மறைவுக்கு டிஎன்சிஏ சார்பில் கவுரவ செயலாளர் ஆர்.எஸ்.ராமசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.* சென்னையில் நடக்கும் தேசிய அளவிலான 5வது ஜூனியர் பாக்சிங் போட்டியில் நேற்று மகளிருக்கான 60 கிலோ எடை பிரிவில் குஞ்சராணி தேவி (மணிப்பூர்) தங்கம், பிராச்சி (அரியானா) வெள்ளி வென்றனர். அரையிறுதி வரை முன்னேறிய தமிழக வீராங்கனை மாலதி, ராஜஸ்தான் வீராங்கனை திஷா கெலாட் வெண்கலம் வென்றனர்.
from Dinakaran.com |12 Jul 2022 https://ift.tt/39noA7t
via IFTTT
0 Comments