புதுடெல்லி: டேவிஸ் கோப்பை டென்னிஸ் உலக பிரிவு-1ல் டென்மார்க் அணியுடன் மோதவுள்ள இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. டென்மார்க்கின் ஹில்லெராட் நகரில் உள்ள ராயல் ஸ்டேஜ் அரங்கில் பிப்ரவரி 3, 4 தேதிகளில் நடைபெற உள்ள இந்த போட்டியில் சசிகுமார் முகுந்த், பிரஜ்னேஷ் குணேஷ்வரன், ராம்குமார் ராமநாதன், ரோகன் போபண்ணா, யுகி பாம்ப்ரி ஆகியோர் இந்திய அணிக்காக களமிறங்க உள்ளனர். மாற்று வீரராக சுமித் நாகல் அறிவிக்கப்பட்டுள்ளார்.விளையாடாத கேப்டனாக ரோகித் ராஜ்பால் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த ஆண்டு மார்ச்சில் டெல்லி ஜிம்கானா கிளப் வளாகத்தில் நடந்த டேவிஸ் கோப்பை போட்டியில், டென்மார்க் அணியுடன் மோதிய இந்தியா 4-0 என்ற கணக்கில் அபாரமாக வென்றது குறிப்பிடத்தக்கது. அடுத்து நார்வே அணியுடன் நடந்த போட்டியில் இந்தியா 1-3 என்ற கணக்கில் தோல்வியைத் தழுவியது.
from Dinakaran.com |25 Dec 2022 https://ift.tt/bPmZzDO
via IFTTT
0 Comments