ஜோதிடம்

* மிர்பூரில் நடந்த 2வது டெஸ்டில் இந்திய பேட்ஸ்மேன்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய வங்கதேச சுழற்பந்துவீச்சாளர் மெஹிதி ஹசன் மிராசுக்கு, இந்திய நட்சத்திரம் விராத் கோஹ்லி 18ம் எண் கொண்ட தனது ஜெர்சியை நினைவுப் பரிசாக வழங்கி கவுரவித்துள்ளார்.* ஆண்டின் சிறந்த டெஸ்ட் வீரருக்கு வழங்கப்படும் விருது, இனி மறைந்த சுழற்பந்து நட்சத்திரம் ‘ஷேன் வார்ன்’ பெயரில் வழங்கப்படும் என கிரிக்கெட்வ் ஆஸ்திரேலியா அறிவித்துள்ளது.* தமிழக அணியுடன் ரஞ்சி கோப்பை லீக் ஆட்டத்தில் மோதவுள்ள டெல்லி அணியின் முன்னணி வேகப் பந்துவீச்சாளர்கள் 5 பேர் காயம் காரணமாக விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது, அந்த அணிக்கு பெரும் பின்னடைவை கொடுத்துள்ளது.* இலங்கை அணியுடன் நடக்க உள்ள டி20 தொடரில் பார்மில் இல்லாத கே.எல்.ராகுல் நீக்கப்பட வாய்ப்பு உள்ளதாகவும், காயம் காரணமாக அவதிப்பட்டு வரும் ரோகித் ஷர்மா , நட்சத்திர வீரர் கோஹ்லிக்கு இத்தொடரில் ஓய்வளிக்கப்படலாம் என்றும் பிசிசிஐ தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.



from Dinakaran.com |27 Dec 2022 https://ift.tt/39yNrzA
via IFTTT

Post a Comment

0 Comments