ஜோதிடம்

* வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக ஜோகன்னஸ்பர்க் வாண்டரர்ஸ் மைதானத்தில் நேற்று தொடங்கிய 2வது டெஸ்டில், டாஸ் வென்று பேட் செய்த தென் ஆப்ரிக்கா முதல் நாள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 311 ரன் குவித்துள்ளது. எல்கர் 42, மார்க்ரம் 96, டோனி 85, கேப்டன் பவுமா 28, ரிக்கெல்டன் 22 ரன் எடுத்தனர். * முதுகுப் பகுதியில் ஏற்பட்ட காயத்தால் அவதிப்பட்டு வரும் வேகப் பந்துவீச்சாளர் பும்ராவுக்கு நியூசிலாந்து மருத்துவமனையில் அறுவைசிகிச்சை செய்யப்பட்டுள்ளது. மார்ச் இறுதி வரை அவர் அங்கு தங்கியிருப்பார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.* டெஸ்ட் போட்டிகளுக்கான பந்துவீச்சு தரவரிசை பட்டியலில் நம்பர் 1 இடத்தை இந்தியாவின் ஆர்.அஷ்வின், இங்கிலாந்து வேகம் ஆண்டர்சன் பகிர்ந்துகொண்டுள்ளனர்.* உ.பி.வாரியர்ஸ் அணியில் இருந்து காயம் காரணமாக விலகிய விக்கெட் கீப்பர் லக்‌ஷ்மி யாதவுக்கு பதிலாக புதுமுக வீராங்கனை ஷிவாலி ஷிண்டே சேர்க்கப்பட்டுள்ளார்.



from Dinakaran.com |09 Mar 2023 https://ift.tt/M42SNVJ
via IFTTT

Post a Comment

0 Comments