
திருநெல்வேலி மாவட்டத்தில் நேற்று மட்டும் 190 பேருக்கு புதிதாக கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதில் 101 பேர் திருநெல்வேலி மாநகர பகுதிகளைச் சேர்ந்தவர்கள். வட்டார அளவில் பாதிப்பு எண்ணிக்கை: அம்பாசமுத்திரம்- 17, மானூர்- 3, நாங்குநேரி- 4, பாளையங்கோட்டை- 26, பாப்பாகுடி- 2, ராதாபுரம்- 6, வள்ளியூர்- 10, சேரன்மகாதேவி- 14, களக்காடு- 7. இஸ்ரோ மையத்தில் 2 ஊழியர்களுக்கும், கல்லிடைக் குறிச்சியில் ஒரே தெருவில் 3 பேருக்கும், மற்றொரு தெரு வில் 2 பேருக்கும் பாதிப்பு கண்டறியப்பட்டது.
எஸ்ஐ உயிரிழப்பு
உவரி காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் கார்லூஸ் (57). கன்னியாகுமரி மாவட்டம் திட்டுவிளையைச் சேர்ந்த இவர், கூடங்குளத்தில் வசித்து வந்தார். கடந்த 1986-ல் காவல்துறையில் பணியில் சேர்ந்த இவர், 2019-ல் சப்-இன்ஸ்பெக்டராக பதவி உயர்வு பெற்றார். காய்ச்சல் ஏற்பட்டதால் நாகர்கோவிலில் தனியார் மருத்துவமனையில் கடந்த மார்ச் 16-ம் தேதி அனுமதி க்கப்பட்டார். பரிசோதனையில் அவருக்கு கரோனா தொற்று உறுதியாகியிருந்தது. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் நேற்று உயிரிழந்தார். இதுபோல் திருநெல்வேலி மாநகர பகுதியைச் சேர்ந்த 60 வயது முதியவர் ஒருவர் கரோனாவால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3uSfby5
0 Comments