https://ift.tt/3sYoCuC

ரோட்டரி கிளப் ஆஃப் மெட்ராஸ் சார்பில் கரோனா தடுப்பூசியை பராமரிக்க ரூ.1 கோடி மதிப்பிலானஉபகரணங்கள் சுகாதாரத் துறைசெயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணனிடம் வழங்கப்பட்டன.

ரோட்டரி கிளப் ஆஃப் மெட்ராஸ் சார்பில் கரோனா தடுப்பூசிகளை பாதுகாப்பாக கொண்டு செல்ல தேவையான பராமரிப்பு உபகரணங்களை தமிழக அரசுக்குவழங்கும் நிகழ்ச்சி, சென்னை அண்ணாசாலையில் உள்ள அரசுபன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் நேற்று நடந்தது. மெட்ராஸ் ரோட்டரி கிளப் தலைவர் கபில் சித்தலே ரூ.1 கோடி மதிப்பிலான தடுப்பூசிகளை கொண்டு செல்ல குளிர்சாதன வசதியுடைய 4 வாகனங்கள், தடுப்பூசியை வைப்பதற்கு 40 ஐஸ்-லைண்ட் குளிர்சாதன பெட்டிகள் மற்றும் 1,000 தடுப்பூசி கேரியர்களை சுகாதாரத் துறைச் செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணனிடம் வழங்கினார். அப்போது, பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வ விநாயகம், மருத்துவக் கல்வி இயக்குநர்நாராயணபாபு, ரோட்டரி இன்டர்நேஷனல் இயக்குநராக தேர்வாகியுள்ள ஏ.எஸ்.வெங்கடேஷ், ரோட்டரி கிளப் ஆஃப் மெட்ராஸ் இயக்குநர் (சிறப்பு திட்டம்) எஸ்.பாலகிருஷ்ணன், தலைவர் கவுதமதாஸ், இணைத் தலைவர் ஏ.எம்.விஸ்வநாதன், செயலாளர் பி.பி.பிரசாத் ஆகியோர் உடன் இருந்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3nyOR9N

Post a Comment

0 Comments