https://ift.tt/3v8U6Qd

அதிமுக அவைத்தலைவரும், முன்னாள் அமைச்சருமான இ.மதுசூதனனின் மனைவி ஜீவா (75) நேற்று காலை உடல் நலக்குறைவால் காலமானார். அவரது மறைவுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் முதல்வர் பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளனர்.

அவர்கள் வெளியிட்ட இரங்கல் செய்தி: அவைத்தலைவர் மதுசூதனன் மனைவி ஜீவா, சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார் என்ற செய்தி கேட்டு மன வேதனை அடைந்தோம். மனைவியை இழந்துவாடும் மதுசூதனன், அவரது குடும்பத்தாருக்கும் இந்த துயரத்தை தாங்கிக் கொள்ளும் சக்தியையும் தைரியத்தையும் அளிக்கவும், அவரது ஆத்மா இறைவன் திருவடி நிழலில் அமைதி பெறவும் இறைவனை பிரார்த்திக்கிறோம்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3gnHoZD

Post a Comment

0 Comments