https://ift.tt/3wFY6Ju

வேளச்சேரியில் இருசக்கர வாகனத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் எடுத்துச் செல்லப்பட்ட விவகாரம் தொடர்பாக மாநகராட்சி உதவி பொறியாளர் உட்பட 4 பேருக்கு போலீஸார் சம்மன் அனுப்பி உள்ளனர்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த 6-ம் தேதி நடந்து முடிந்தது. வாக்குப்பதிவு முடிந்ததும் மின்னணு வாக்கு இயந்திரங்கள் அனைத்தும் சீல் வைக்கப்பட்டு, அந்தந்த வாக்கு எண்ணும் மையங்களுக்கு அனுப்பப்பட்டன. சென்னை வேளச்சேரி-தரமணி 100 அடி சாலையில் 3 வாக்குப்பதிவு இயந்திரங்களை ஒருவர் இருசக்கர வாகனத்தில் வைத்து எடுத்துச் சென்றார். இதைப் பார்த்த திமுக மற்றும் காங்கிரஸ் கட்சியினர் அவரை மடக்கிப் பிடித்தனர். கள்ள ஓட்டு போடுவதற்காக இயந்திரங்களை எடுத்துச் செல்வதாக கூறி, அவரை தாக்க முயன்றனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3t7gJ74

Post a Comment

0 Comments