
கரோனா தொற்று பாதிப்பால் கும்பகோணத்தில் ஒரேநாளில் 2 மருத்துவர்களும் குடியாத்தத்தில் பெண் செவிலியர் ஒருவரும் நேற்று உயிரிழந்தனர். மேலும், மதிமுக துணைப் பொதுச் செயலாளர் துரை.பாலகிருஷ்ணனும் நேற்று உயிரிழந்தார்.
கும்பகோணம் சாந்தி நகரில்நீரிழிவு சிகிச்சைக்கான மருத்துவமனையை நடத்தி வந்தவர் மருத்துவர் சித்தார்த்தன்(52). தஞ்சாவூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதைஅடுத்து, அங்கு சிகிச்சை பெற்று வந்த சித்தார்த்தன் நேற்று சிகிச்சை பலனின்றி இறந்தார். இவரது மறைவுக்கு, திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி நேற்று இரங்கல் தெரிவித்துள்ளார்
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3oKWbQa
0 Comments