
மண் கடத்தல் புகாரில் லஞ்ச ஒழிப்புப் பிரிவு காவல் துறையி னரால் வழக்குப்பதிவு செய்யப் பட்டுள்ள ராணிப்பேட்டை மாவட்ட தனிப்பிரிவு காவலர்கள் இருவர் தூக்கியடிக்கப்பட்டு புதிய காவலர்களை நியமித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் சிவகுமார் உத்தரவிட்டுள்ளார்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் கடந்த 2019-ம் ஆண்டு ஆகஸ்ட் 25-ம் தேதி சோளிங்கர் அருகேயுள்ள புலிவலம் கிராமத்தில் சார் ஆட்சியர் இளம்பகவத் மண் கடத்தல்கும்பலை பிடிக்க முயன்றார். அப்போது, மண் கடத்தும் நபர் சரவணன் என்பவர் தப்பியோடும் போது அவரது செல்போன் சார் ஆட்சியர் வசம் கிடைத்தது. அதை ஆய்வு செய்தபோது அவருக்கும், முன்னாள் ராாணிப்பேட்டை வருவாய் கோட்டாட்சியராக இருந்து தற்போது ஈரோடு ஆவின் பொது மேலாளராக இருக்கும் முருகேசன் மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் மற்றும் காவல் துறை அதிகாரிகளுடன் தொடர்பில் இருப்பது தெரியவந்தது. மேலும், மண் கடத்தலுக்காக இவர்களுக்கு இடையில் பணப்பரிமாற்றம் குறித்த விவரங்கள் வாட்ஸ்-அப் உரையாடலாகவும் பதிவாகி யிருந்தன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2ReOi9t
0 Comments