
சென்னையில் நடந்த வழிப்பறி வழக்கில் கைதான நபருக்கு தீவிரவாத அமைப்புடன் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது.
சென்னை பெரியமேடு சென்ட்ரல் அருகே சுராஜ் என்ற நகை வியாபாரியிடம் ரூ.7 லட்சத்து 50 ஆயிரம் பணம், 282 கிராம் தங்க நகையை கடந்த 5-ம் தேதி இரண்டு மர்ம நபர்கள் வழிப்பறி செய்தனர். இந்த வழக்கில், யாசின் என்பவரை போலீஸார் கண்டுபிடித்து கைது செய்தனர். அவர் மீது வழக்குப்பதிவு செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். யாசினிடம் நடத்திய விசாரணையில் அவரது கூட்டாளி குறித்த தகவல் கிடைத்தது. அதை வைத்து ரபீக் என்பவரை நேற்று முன்தினம் போலீஸார் கைது செய்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3fzuc1M
0 Comments