சென்னை: இந்திய ஹாக்கி அணியில், தமிழக வீரர்கள் மீண்டும் இடம் பெற வேண்டும் என்பதே எல்லோரின் விருப்பம் என்று தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் தெரிவித்தார். மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் 11வது தேசிய சீனியர் ஆண்கள் ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டி இன்று தொடங்குகிறது. முன்னதாக இந்தப் போட்டியில் தமிழகம் சார்பில் பங்கேகும் வீரர்களை வாழ்த்தி வழி அனுப்பும் நிகழ்ச்சி எழும்பூர் ஹாக்கி அரங்கில் நேற்று நடந்தது. அதில் பங்கேற்று வீரர்களை வாழ்த்திப் பேசிய தமிழக விளையாட்டுத் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன், வீரர்களுக்குத் தேவையான விளையாட்டு உபகரணங்களை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கூறியதாவது: வீரர்களின் பயணம் வெற்றிப் பயணமாக அமைய வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.இந்திய அளவிலான ஹாக்கி போட்டிகளில் மட்டுமின்றி, இந்தியாவுக்காக விளையாடும் தேசிய அணியிலும் தமிழக வீரர்கள் இடம் பெற்று விளையாட வேண்டும். அதுதான் அனைவரின் விருப்பமாக உள்ளது. அதற்காகதான் உரிய பயிற்சி அளித்து 18 பேர் கொண்ட அணி தேர்வு செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு விளையாட்டிலும் வீரர்கள் நேர்மையாக தேர்வு செய்யப்படுகின்றனர். தமிழகம் முழுவதும் உள்ள பேரவை தொகுதிகளில் நிலம் தேர்வு செய்யப்பட்ட உடன், உள்ளரங்கங்கள் அமைக்கும் பணி தொடங்கும். இவ்வாறு அமைச்சர் பேசினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு ஹாக்கி சங்கம் செய்திருந்தது. தமிழக அணி விவரம்: சதீஷ் (கேப்டன்), சண்முகம், செந்தில் குமார், தனுஷ், சியாம் குமார், பிருத்வி, ரமேஷ், சில்வர் ஸ்டாலின், ரகுராம், ஜோஷ்வா, செந்தமிழ் அரசு (கோல்கீப்பர்), மாரீஸ்வரன், தினேஷ்குமார், சண்முகம், அருண் பிரசாத், முத்து செல்வன், கார்த்தி, சுந்தரபாண்டியன், சார்லஸ் டிக்சன் (தலைமை பயிற்சியாளர்), கிளமெண்ட் லூர்துராஜ் (அணி மேலாளர்), முத்துக்குமாரன் (உதவி பயிற்சியாளர்).
from Dinakaran.com |11 Dec 2021 https://ift.tt/3rWhIJy
via IFTTT
0 Comments